சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கை:
விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் வலுசேர்க்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விடாததைக் கண்டித்தும், தேமுதிக சார்பில் வரும் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
