ஹோஷியார்பூர்: அமெரிக்காவின் எப்பிஐ அமைப்பு, இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச குற்ற கும்பல்களுக்கு எதிராக ஆபரேஷன் ஹாட் பால் என்ற விரிவான பன்னாட்டு விசாரணையை நடத்தியது. இதில், இந்திய சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளிட்ட கும்பல்கள் குறித்து விசாரிக்கப்படுகிறது. இந்த விசாரணையின் அடிப்படையில் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர், டாண்டா காவல்நிலைய இன்ஸ்பெக்டர் குரிந்தர்ஜித் சிங் நாக்ரா பெயர் இடம் பெற்றுள்ளது.
சர்வதேச குற்ற கும்பலுடன் தொடர்புடைய இவர் பொய்யான கொலை வழக்கில் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு குடும்பத்தினரை மாட்டி விடுவதாக மிரட்டி ரூ.16 லட்சம் பணம் பறித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் நாக்ரா கைது செய்யப்பட்டுள்ளார். நாக்ரா பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.
