உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி ராமர் கோயில் வழக்கு நாளை விசாரணை

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம் குறித்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நாளை விசாரணையை தொடங்குகிறது. அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடை முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டுமென இந்து தர்ம பரிஷத் உள்ளிட்ட 4 பேர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை கடந்த 13ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த ஒப்புக் கொண்டது.

மேலும், இவ்விவகாரத்தை விசாரிக்க உத்தரப்பிரதேச அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக்குழு நிலை அறிக்கை தாக்கல் செய்யவும், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் கொண்ட அமர்வில் நாளை விசாரணை தொடங்க இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

Related Stories: