நெல்லையில் முகம் சிதைத்து பிளம்பர் கொடூர கொலை

நெல்லை: நெல்லை டவுன் பாறையடி மந்திரமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற ஆனந்தராஜ் (38). பிளம்பர். இவர் நேற்று காலை நண்பர்கள் அழைத்ததாக வீட்டை விட்டு வெளியே புறப்பட்டுச் சென்றவர், டவுன் சாலையில் கோயில் அருகே உள்ள ஒரு தொட்டியில் அமர்ந்திருந்திருந்தார். அவரை அழைத்துச் சென்ற நண்பர்கள் 2 பேர், பைக்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு வருவதாகக் கூறி விட்டு அருகில் உள்ள பங்கிற்கு பைக்கில் சென்றுள்ளனர்.

மீண்டும் அவர்கள் திரும்பி வந்த போது, ஆவுடையப்பன் சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டு முகம் சிதைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து ஆவுடையப்பனின் உறவினர்கள் அங்கு பெருமளவில் திரண்டனர். நெல்லை டவுன் போலீசார் விரைந்து வந்தனர்.

அப்போதுகொலையாளிகளை கைது செய்தால் மட்டுமே உடலை இங்கிருந்து எடுக்க விடுவோம் எனக்கூறி ஆவுடையப்பன் உறவினர்கள் அந்த பகுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியில் உள்ள கோட்டையடியைச் சேர்ந்த பெயிண்டர் ரஞ்சன் (30) என்பவருக்கும், கொலையான ஆவுடையப்பனுக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்தது தெரியவந்துள்ளது.

ஆவுடையப்பன் ஒரு மாதத்திற்கு முன்பு ரஞ்சனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்தில் ரஞ்சன் நேற்று பாறையடி பகுதியில் தனியாக நின்றிருந்த ஆவுடையப்பனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து தப்பியோடியதாக போலீசார் புலன் விசாரணையில் உறுதி செய்தனர். இதையடுத்து ரஞ்சனை போலீசார் பிடித்தனர். மேலும், பிடிபட்ட ரஞ்சனை தவிர இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: