அமோனியா வாயு அகற்றப்பட்ட நிலையில் இறால் தொழிற்சாலையில் 5 அறைகளுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பைப்புகளில் அமோனியா வாயு முழுவதும் அகற்றும் பணிகள் முடிந்து தொழிற்சாலையில் 5 அறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. இதில், கடந்த மாதம் 21ம் தேதி தொழிற்சாலையில் பணியாற்றிய வடமாநிலத்தவர்கள் அமோனியா வாயு கசிவில் பாதிக்கப்பட்ட இவர்களை சகதொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மஞ்சங்காரணை, செங்குன்றம் தனியார் மருத்துவமனைகளுக்கு 83 பேர் சிகிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், மேல் சிகிச்சைக்காக 20 பேர் சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், 51 பேர் கடந்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 18 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் 3 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கன்னிகைப்பேர் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 4 நாட்களாக அம்மோனியா வாயு அகற்றும் பணிகள் நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. கடந்த 2 நாட்களில் சேமிப்பு கலன்களில் இருந்து எடுக்கப்பட்டு நேற்று முன்தினம் 5 டன் எடையுள்ள அம்மோனியா வாயு டேங்கர் லாரியில் எடுத்து செல்லப்பட்டு சென்னை மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் இறக்கப்பட்டது.

தொழிற்சாலையில் உள்ள குழாய்களில் எஞ்சிய அம்மோனியாவை கந்தக அமிலம் கொண்டு கம்ப்ரஸர் மூலம் அகற்றி சுமார் 400 கிலோ அம்மோனியா வாயு டேங்கர் லாரியில் மாற்றப்பட்டுள்ளது. இரவு அல்லது அதிகாலையோ டேங்கர் லாரி புறப்பட்டு சென்னை மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று தொழிற்சாலையில் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆய்வுப் பணிகளை முடித்து தொழிற்சாலையில் உள்ள அலுவலகம் மற்றும் குடோன்கள், அமோனியா இருந்த இடங்கள் என 5 அறைகளில் திருவள்ளூர் ஆர்டிஒ ரவிச்சந்திரன் முன்னிலையில், ‘சீல்’ வைக்கப்பட்டது. உடன் தாசில்தார் (பொறுப்பு) ரஜினிகாந்த் ஆகியோர் உடனிருந்தனர். இன்று தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: