10ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு நாளை வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விடைத்தாள் ஒளிநகல் பெற்ற தேர்வர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க 17.6.2026 முதல் 23.6.2026 வரையிலும், பின்னர் தேர்வர்களின் நலன்கருதி மீண்டும் 25.6.2026 அன்று ஒரு நாளும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரி பாடவாரியாக பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 8682 (மறுமதிப்பீடு- 7931 /மறுகூட்டல்-751) ஆகும். தற்போது, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.

இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 9498383075 /9498383076 என்ற கைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: