மாஸான ஹீரோ நானு.! “முதல்வர் இப்போ ஜோக்கரானேன்” ; நேற்று செய்த கோமாளித்தனத்தை பார்த்து ஆச்சரியத்தில் அசந்து போன தமிழகம்…

சென்னை: டைட்டிலில் இருக்கும் மாஸான ஹீரோ நானு.! “முதல்வர் இப்போ ஜோக்கரானேன்” என்பதை பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து ஹிட்டடித்த எதிர்நீச்சல் படத்தில் வரும் “டேமேஜ் ஆன பீசு நானே, ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்” என்ற பாடல் வரி உங்களுக்கு நினைவிற்கு வந்தாலும் வரலாம். சரி, செய்தி என்னவென்று பார்ப்போம்

சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கின்ற விவாதத்திற்கான பதிலுரையில் முதல்வர் விஜய் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லிய விதம் எத்தனை பேரின் நம்பிகையை இழக்க செய்திருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடி இருக்கிறார். இது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசியிருக்கும் ஆர்.பி.உதயகுமார், 35 சதவீத மக்களின் வாக்குகளை பெற்றாலும், ஆட்சியமைக்கும் முன்பாக பிற கட்சிகளின் ஆதரவை பெற்று துக்ளக் தர்பார் நடத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறது தவெக. ஏராளமான மக்கள் நல திட்டங்களை பல ஆண்டுகாலமாக தமிழக மக்களுக்கு கொடுத்துள்ள சட்டமன்றத்தினுள் முதல்வர் விஜய் நேற்று கொடுத்த பதிலுரையின் போது, இங்க இருந்த அப்பாவை காணோம் என்று நடிப்பை வெளிப்படுத்திய விதம் எங்கே போனது தமிழக சட்டமன்ற மாண்பு.!! என்ற கேள்வி பார்த்தோர் மனதில் எழாமல் இல்லை..

மாநில வளர்ச்சிக்கான பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்திய சட்டமன்றத்திலே நேற்று தமிழக முதல்வர் பதிலுரை என்ற பெயரில் வெளிப்படுத்திய கோமாளித்தனத்தை பார்த்து சிரிப்பதா, அழுவதா என்பதே புரியவில்லை. மொத்தத்தில் முதல்வரின் கோமாளித்தனத்தை பார்த்து ஆச்சரியத்தில் அசந்து போனது நம் அன்னை தமிழ்நாடு என்று வெளுத்து வாங்கி இருக்கிறார் உதயகுமார்.

அதோடு நில்லாமல், கான்ஃபிடன்ட்டா இருங்க நல்லதே நடக்கும் என்ற முதல்வரின் வசனத்தையே இங்கு நினைவுபடுத்தி வேறு என்ன முதல்வரின் அதிரடி ஆக்ஷனை பார்த்து சொல்ல முடியும் என்று உதயகுமார் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Related Stories: