இடைத்தேர்தலில் சீட் இல்லை? 4 பேர் வெல்வது சந்தேகம் என தவெக தயக்கம்

 

சென்னை: ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்க தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணி உருவானது. சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த அணியை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு கொடுத்தது.

இதற்கிடையே ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்யபாமா ஆகிய 4 அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமானார்கள். நீண்ட இழுபறிக்கு பின்னர் மற்ற 21 எம்எல்ஏக்களும் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவர்கள் மீதான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற்றார். ஆனாலும், அதிமுகவில் இருந்து தற்ேபாதைய எம்எல்ஏக்கள் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் தொடர்ந்து எடப்பாடி மீது அதிருப்தியிலேயே உள்ளனர். இந்நிலையில் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்க தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஆகியோருக்கு இடைத்தேர்தலில் சீட் இல்லை? என தகவல் வெளியாகியுள்ளது. தொகுதியில் நல்ல பெயர் இல்லாததால் அவர்களுக்கு சீட் தந்தால் வெற்றி பெறுவது கடினம் என தவெக தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் சீட் வழங்க தவெக தயக்கம் காட்டுவதால் அதிர்ச்சி வெளியாகியுள்ளது.

Related Stories: