வேலூர் பத்திரப்பதிவு மண்டலத்தில் 2026-27ம் நிதியாண்டில் ரூ.1,300 கோடி வருவாய் இலக்கு: அதிகாரிகள் தகவல்

 

வேலூர், ஜூன் 22: வேலூர் பத்திரப்பதிவு மண்டலத்தில் 2026-27ம் நிதியாண்டில் ரூ.1,300 கோடி வருவாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் 579 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியது. இந்த வருவாயை பெருக்கும் வகையில் கடந்த 2012ல் புதிய வழிகாட்டி மதிப்பு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் இலக்கு வைத்தாலும், அதை அடைவது என்பது எட்டாக்கனியாக இருந்தது.

Related Stories:

தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.