மாந்தோப்பில் 3 யானைகள் புகுந்து அட்டகாசம்; மாமரங்கள், 2 டன் மாங்காய்கள் சேதம்

 

கே.வி.குப்பம், ஜூன் 19: கே.வி.குப்பம் அருகே நள்ளிரவில் மாந்தோப்பில் 3 யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து 2 டன் மாங்காய்களையும், மாமரங்களையும், தென்னை, வாழை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது காட்டு யானைகள் வெளியேறி விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனை வனத்துறையினர் கண்காணித்து யானைகளை, விவசாயிகள் உதவியுடன் விரட்டி அடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள், செஞ்சி அடுத்த ராஜாதோப்பு அணை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது.

Related Stories:

தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.