திருச்சி, ஜூன் 19: திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையிலுள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் நாளை (ஜூன் 20) நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 108 ஆம்புலன்ஸ்கள் ஜி.வி.கே, எம்.ஆர்.ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனங்களின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இதில் அவசரகால மருத்துவ உதவியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பணிகளை நிரப்பும் வகையில் வேலை வாய்ப்பு முகாம் நாளை (ஜூன் 20) காலை 10 மணி முதல் 2 மணி வரை, திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
