அரசு பழங்குடியினர் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

சென்னை: அரசு பழங்குடியினர் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வரும் 22 மற்றும் 23ம் தேதி நடைபெறுகிறது. பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், காப்பாளர்கள், இடைநிலை ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு, மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான இணைய வழி பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்கள் காலை 10 மணி முதல் அந்தந்த மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்திட்ட அலுவலகம் / ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது, பணியிடமாறுதல் கோரி இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: