ஏசி மின்சார பஸ் தான் கொள்முதல் செய்யணும்: முதல்வர் உத்தரவு

சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், போக்குவரத்து துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து கழகங்களால் புதிதாக கொள்முதல் செய்யப்படும் பேருந்துகள் குளிர்சாதன மின்சார பேருந்துகளாக இருக்க வேண்டும் என்றும், பயணிகள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் பயணிக்க ஸ்மார்ட் கார்டு முறையை அமுல்படுத்த வேண்டும் எனவும், பேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்ட செயலாக்கம் குறித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தலைமை செயலாளர் சாய்குமார், நிதித்துறை செயலாளர் சித்திக், போக்குவரத்து துறை செயலாளர் வள்ளலார், போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர் லில்லி, மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: