ஆர்டிஐ சட்டம் ஒரு தொழிலாக மாறிவிட்டது: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம்

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் பட்டாலா நகரில் ஒன்றிய அரசு வழங்கிய ரூ.57 கோடி நிதி ஒதுக்கீட்டில் சாலை கட்டுமான பணிகள் நடந்து வந்தன. இந்த பணியில் முறைகேடு நடப்பதாக கூறி, கட்டுமான பணிகளை தடுத்ததுடன், அங்கு பணியாற்றிய தொழிலாளர்களை சாதிய ரீதியாக இழிவுபடுத்தி, அவர்களை தாக்கியதாக இருவர் மீது கடந்த பிப்ரவரி 20ம் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைதாவதை தவிர்க்க, சம்பந்தப்பட்ட நபர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை கடந்த மே மாதம் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் நீதிபதி விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ”தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) பெயரில் செயல்படும் சமூக ஆர்வம் என்பது தற்போது ஒரு புதிய தொழிலாகவே மாறிவிட்டது.

இதன் மூலம் அரசு ஊழியர்களை அவர்களின் கடமையை செய்ய விடாமல் தடுத்து வருகிறார்கள். சாலை கட்டுமான பணிகளை கண்காணிக்க இவர்கள் யார்? நீங்கள் அங்கு இன்ஜினியரா அல்லது உயர் அதிகாரிகளா அல்லது நீங்கள் பொதுமக்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியா ஆகிய கேள்விகள் எழுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த பணிகளை அதிசார்ந்த அதிகாரிகளே பார்த்துக்கொள்வார்கள். உங்களுக்கு இதில் எந்தவித உரிமையும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித நீதிபதிகள்,மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: