பிராட்டிஸ்லாவா: பிரதமர் மோடிக்கு சுலோவாக்கியாவின் உயரிய தேசிய விருதான ஆர்டர் ஆப் தி வொயிட் டபுள் கிராஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரதமர் மோடி ஐரோப்பியாவில் ஒரு வார கால அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் சுலோவாக்கியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பிராட்டிஸ்லாவாவில் நடந்த விழாவில் பிரதமர் மோடிக்கு உயரிய தேசிய விருதான ஆர்டர் ஆப் தி வொயிட் டபுள் கிராஸ் விருதை அந்நாட்டின் அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி வழங்கினார். இந்த விருது வெளிநாட்டு குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் மிக உயர்ந்த குடிமை மற்றும் ராணுவ அரசு விருதாகும்.
இது குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில்,
‘‘இந்த கவுரவத்திற்காக சுலோவாக்கியா மக்களுக்கும் அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது இந்தியாவின் 140கோடி மக்களுக்குச் சொந்தமான கவுரவம். இந்த விருதை இந்தியா மற்றும் சுலோவாக்கியா இடையிலான நீடித்த நட்புறவுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து பிரதமர் மோடி பள்ளி மாணவர்கள் நடத்திய சிறப்பு யோகா செயல்விளக்கத்தை பிரதமர் மோடி மற்றும் சுலோவாக்கிய அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி ஆகியோர் பார்வையிட்டனர்.
