சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொலைநோக்குப் பார்வை மிக்க தலைமையின் கீழ், தமிழக அரசு விளையாட்டை ஒரு சக்திவாய்ந்த சமூக மாற்றக் கருவியாகக் கருதி செயலாற்றி வருகிறது. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழியில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதே அரசின் தலையாய நோக்கமாகும். ‘போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்ற உன்னத இலக்கை நோக்கிய பயணத்தில், தூய்மையான நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது.
ஜூன் 26 ஆம் நாள் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நாள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்களிடையே ஏற்படுத்திட தமிழ்நாடு வினையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ‘ஸ்டாட் Runcion Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம்” நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 6 கி.மீட்டர் தூரம் நடைபெறும்.
இந்த போதை பொருள் எதிர்ப்பு ஓட்டம் ஜூன் 26 ஆம் நான் அன்று காலை 6 மணி அளவில் காமராஜர் சாலை-பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் தொடங்கி, ஔவையார் சிலை வரை சென்று திரும்பி. நேப்பியர் பாலம் வழியாக தீவுத்திடலை வந்தடையும். இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையத்தளத்தில் 22.06.2026 வரை பதிவு செய்துக் கொள்ளலாம். மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் இந்த போதை பொருள் எதிர்ப்பு ஓட்டத்தில் பங்கு கொள்ள விரைந்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
