வரலாறு படைத்த எழும்பூர் ரயில் நிலையம்: 118 ஆண்டுகள் நிறைவு

சென்னை: தென்னிந்தியாவின் முக்கிய ரயில் முனையங்களில் ஒன்றான சென்னை எழும்பூர் ரயில் நிலையம், தனது சேவையைத் தொடங்கி 118வது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தென் தமிழகத்திற்கான முக்கிய நுழைவாயிலாக விளங்கி வரும் இந்த ரயில் நிலையம், இந்திய ரயில்வேயின் பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலைச் சிறப்பின் அடையாளமாகத் திகழ்கிறது. இதனையடுத்து 1905 செப்டம்பரில் தொடங்கப்பட்டு, முழு முனையக் கட்டிடம் ஜூன் 11, 1908ஆம் ஆண்டு நிறைவடைந்தன. சுமார் ரூ.17 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இந்தோ, சராசனிக் கட்டடக் கலை வடிவமைக்கப்பட்டது.

இந்த நிலையத்திலிருந்து புகழ்பெற்ற போட் மெயில் என்ற முதல் ரயில் இயக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சேவை வழங்கிவரும் எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய தோற்றத்தை பாதுகாத்தபடியே உலக தரத்திலான பயணிகள் வசதிகளை உருவாக்கம் பணிகள் நடைபெற்று வருகின்றன. 118வது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினர்.

Related Stories: