நாகப்பட்டினத்தில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

நாகை: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படாததை கண்டித்து நாகையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வறண்ட வாய்க்காலுக்கு மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டம் செய்து வருகின்றனர்.

காவேரி டெல்டா விவசாயிகளின் உயிர்நாடியாக கருதப்படும் மேட்டூர் அணை வழக்கமாக குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 தேதி திறக்கப்படும். இந்நிலையில் நடப்பாண்டு ஜூன் 12 தேதி திறக்கப்படாததால் டெல்டா மாவட்டம் விவசாயிகள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தார்கள். நாகை மாவட்டத்தில் உள்ள மீனம்மநல்லூரில் வறண்ட வாய்க்காலுக்கு விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் மலர் வளையம் வைக்க பேரணியாக வந்தனர்.

தொடர்ந்து மலர் வளையத்தை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி தங்களுடைய எதிர்ப்புகளை விவசாயிகள் தெரிவித்தனர். குறுவை சாகுபடிக்கு நீர் திறக்காத காரணத்தால் சந்திரநதியில் பேரணியாக சென்று கதவணையில் மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். காவிரி பிரச்சனையில் மவுனம் காக்கும் முதல்வர் விஜய் விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு 19 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும் என்ற உத்தரவை கர்நாடகா மதிக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: