தூத்துக்குடி: வியட்நாம் நிறுவனமான வின்பாஸ்ட் தூத்துக்குடியில் அமைந்திருக்கும் தனது ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.7,000 கோடி முதலீடு செய்கிறது. விரிவாக்கம் செய்யப்படும் ஆலையில் மின்சார இருசக்கர வாகனங்கள், பேருந்துகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
