சென்னை: ஆர்ஜேடி தேசியத் தலைவர் லாலு பிரசாத் யதாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆர்ஜேடி தேசியத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்காக நீங்கள் தொடர்ந்து முன்னெடுக்கும் போராட்டங்கள், நாடு முழுவதும் உள்ள ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு உத்வேகமாகத் திகழ்கின்றன. நீங்கள் நல்ல உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
