ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு செல்லும் பழுதடைந்த சாலையால் நோயாளிகள் அவதி

திருப்பூர், ஜூன் 11: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சி கூட்டம், தலைவர் பழனியம்மாள் தலைமையில், செயல் அலுவலர் சுந்தரம் முன்னிலையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், 7வது வார்டு சரஸ்வதிகுமார் பேரூராட்சி தலைவரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ஊத்துக்குளி பேரூராட்சி பகுதியில் உள்ள கோழிக்கழிவுகள் அனைத்தும் வள மீட்பு பூங்கா மைதானத்தில் குழி தோண்டி கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் மாசுபடுகிறது.

எனவே, நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். காவல் நிலையம் அருகே பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் விநாயகர் கோயில் அருகில் உள்ள 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிக்குப் பதிலாக, 1,000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி அமைத்துத் தர வேண்டும். ஊத்துக்குளி ஈஸ்வரன் கோயில் எதிரில் இருந்து அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலை பழுதடைந்து காணப்படுவதால் உடனடியாகச் சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories: