திருப்பூர், ஜூன் 9: திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் ஜூலை 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க, திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாறு படுகை முதலாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு 94,521 ஏக்கர் நிலங்களுக்கு இன்று முதல் ஜூலை 15ம் தேதி வரை 36 நாட்களுக்கு, பாசனக் காலத்தை கால நீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
