கொப்பரை ஏலம்

 

காங்கயம், ஜூன் 9: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று திங்கட்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 5 வியாபாரிகள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.107.16க்கும், அதிகபட்ச விலையாக ரூ.123.66க்கும் ஏலத்தில் எடுத்தனர். ஆயிரத்து 663 கிலோ எடையுள்ள 32 மூட்டைகளை மொத்தமாக 2 லட்சத்து 989 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த தகவலை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் அழகிரி சாந்தலிங்கம் தெரிவித்தார்.

 

Related Stories: