சேலம் அருகே அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேக்கப்பட்டி ஊராட்சியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கருப்பூர் தேக்கம்பட்டி பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் சாலையில் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம் மேற்கொண்டனர்.

அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என காலிக்குடங்களுகன் பொதுமக்கள் பேருந்து முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என பல இடங்களில் மக்கள் தொடர் போரட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 1 மணி நேரமாக நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் ஓமலூர் ஊராட்சி மன்ற அலுவலர் மற்றும் கருப்பூர் போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பிறகு போராட்டம் நடத்திய மக்கள் களைந்து சென்றனர்.

Related Stories: