திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும். இந்த அலையாத்திகாட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் தற்போது சனி ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் முத்துப்பேட்டை வனத்துறை சார்பில் கயா என்னும் இருவர் பயணிக்கும் துடுப்பு பைப்பர் படகு அறிமுக நிகழ்ச்சி இன்று ஜாம்புவானோடை படகு துறையில் நடைபெற்றது. இதனை வனச்சரக அலுவலர் சதீஷ்கண்ணன் சுற்றுலா பயணிகள் மத்தியில் அறிமுக செய்து துவக்கி வைத்தார். இதில் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் படகு ஓட்டிகள் கலந்துக்கொண்டனர்.
இதனை கண்ட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் டெமோ செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்று அந்த இருவர் பயணிக்கும் கயா துடுப்பு பைப்பர் படகு இயக்கி சென்று உற்சாகம் அடைந்தனர். இதற்கு இருவர் பயணிக்க ஒரு மணிநேரம் முதல் ஒன்றை மணிநேரம் வரை ரூபாய் 500 கட்டணம் நிர்ணைக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல் 12பேர் பயணிக்கும் இஞ்சின் படகு கட்டணமாக ரூபாய் 2ஆயிரம் வசூல் செய்யப்படுகிறது. அதில் சென்று அலையாத்திகாட்டின் உள்ளே சென்று ரசித்து வந்தாலும் இந்த கயா என்னும் இருவர் பயணிக்கும் துடுப்பு பைப்பர் படகு மேல் ஆர்வம் கொண்டு சுற்றுலா பயணிகள் ஓட்டி சென்று உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
