ஊட்டி அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா: பொதுமக்கள் அச்சம்

 

 

ஊட்டி: ஊட்டி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக காட்டு மாடுகள், கரடிகள், சிறுத்தை மற்றும் புலிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவைகள் அடிக்கடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு வருவதால் மனித- விலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டி அருகே உள்ள சோலூர் பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு அருகில் நாள்தோறும் ஒரு சிறுத்தை ஒன்று உலா வருகிறது.

இதனை அப்பகுதி மக்கள் பார்த்தது மட்டுமின்றி அதனை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் குடியிருப்பு அருகே உலா வரும் சிறுத்தையை பார்த்து மக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சிறுத்தையை அடர்ந்த காட்டிற்குள் விரட்ட வேண்டும் அல்லது கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: