சென்னை அம்பத்தூரில் 1,750 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது

சென்னை: சென்னை ஆவடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

சோதனையின் போது அவ்வழியே வந்த கண்டைனர் வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1,750 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் 1,750 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுநர் மற்றும் குட்கா கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருந்த நபரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் மற்றும் செங்குன்றம் துணை ஆணையர் நேரில் வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். கண்டைனர் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட இந்த 1,750 கிலோ குட்கா எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: