தொண்டாமுத்தூர்: கோவை அருகே பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேரூர் பேரூராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள தோட்டத்து பகுதியில் இன்று (வெள்ளி) காலை மான் ஒன்றை, தெருநாய்கள் விரட்டி கடித்துக் கொண்டிருந்தது. பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் அதைப்பார்த்து நாய்களை விரட்டிவிட்டு பார்த்தபோது மான் இறந்து போனது தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் மதுக்கரை சரக வனக்காவலர் பாலசுப்ரமணியம் சம்பவ இடம் வந்து இறந்துபோன மானின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
