சென்னை: சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் நே.சிற்றரசு வெளியிட்ட அறிவிப்பு: கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு 5ம் தேதி (இன்று) காலை 10 மணியளவில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள வாலாசா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்ப்போர்வை போர்த்தி மரியாதை செலுத்துகிறார்.
அப்போது சென்னை மேற்கு மாவட்ட திமுக, தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி-வட்ட செயலாளர்கள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் அனைவரும் தவறாமல் வருகை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
