சென்னை: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ‘கல்வி தான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி’’ என மாணவர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்த கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவ செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும். மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
