பாடாலூர், ஜூன். 4: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே சிறுமியிடம் சில்மிஷம் செய்த கொத்தனாரை பாடாலூர் போலீசார் நேற்று கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊத்தங்கால் பகுதியை சேர்ந்தவர் ஆச்சிமுத்து (60).
இவர் அதே பகுதியில் உள்ள 6 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவரை பிடித்து பாடாலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்து, வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
