குன்னம், ஜுன் 3: குன்னம் அருகே அகரம்சீகூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழலகம் அமைத்து தர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் பேருந்து நிலையத்தில் தினமும் ஆயிரகணக்கான பொதுமக்கள் மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அரசு ஊழியர்கள் மற்றும் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பயணிகள் வந்து செல்கின்றனர்.
பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கட்டண கழிப்பறைகள், பேருந்து நிலையத்தில் உள்ளே பொதுமக்கள் பயன்படுத்த ஏடிஎம் தானியங்கி மிஷின், ஓட்டுனர்கள் நடத்துனர்கள் இளைப்பாற அறைகள், தாய்மார்கள் பாலூட்டும் வசதிகள் கொண்ட அறைகள் உள்ளிட்ட வசதியுடன் நிழலகம் அமைக்காமல் இருப்பதால் வெயிலிலும் மழையிலும் பேருந்து ஏற வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதனால் பேருந்து நிலையத்தில் பயணியர்களுக்கு நிழல்குடை இல்லாததால் பேருந்து ஏற வரும் பயணிகளுக்கு சிரமமாக இருப்பதாக கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்ககை எடுத்து இப்பகுதி மக்களுக்கு புதிய நிழலகம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
