பெரம்பலூர், மே 26: பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் , அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணி புரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வருகிற ஜூன் 5ம் தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் , அவர் தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நாள் வருகிற ஜூன் மாதம் 05 ஆம்தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில், பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது
