வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்டம் கேட்டு போராட்டம்

குன்னம், ஜுன் 4: வேப்பூர் ஊராட்சியில் ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்டம் கேட்டு போராட்டம் நடந்தது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

ஒன்றிய செயலாளர் செந்தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய தலைவர் செந்தில்குமார், ஒன்றிய துணைத் தலைவர் சந்தோஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பி கே சேகர் மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜசேகர், மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட குழு உறுப்பினர் சத்தியசீலன், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: