குட்கா, பான் மசாலா விற்பதற்கான தடை ஓராண்டிற்கு நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால் கடந்த 2013ம் ஆண்டில் தடை கொண்டு வரப்பட்டது. இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், மே 23ம் தேதியுடன் கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை தயாரித்தல், பதுக்கி வைத்தல், கொண்டு செல்லுதல், விநியோகித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை வரும் 2027ம் ஆண்டு மே 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

Related Stories: