குடியிருப்பில் புகுந்து யானை குத்தியதில் மதபோதகர் சாவு

அருமனை: குமரி மாவட்டம் அருமனை அருகே கடையாலுமூடு பேரூராட்சிக்கு உள்பட்ட மருதம்பாறை பகுதியில் ரப்பர் தோட்டங்கள், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நேற்று காலை 6.30 மணி அளவில் காட்டில் இருந்து இறங்கிய 3 யானைகள் ரப்பர் தோட்டத்தின் கேட்டை உடைத்து குடியிருப்புக்குள் புகுந்தன. இதை பார்த்த மக்கள் யானை கூட்டத்தை காட்டுக்குள் விரட்ட முயன்றனர்.

தகவலறிந்து வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானை கூட்டத்தை காட்டுக்குகள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் 3 யானைகளும் 3 திசைகளுக்கு பிரிந்து சென்று விட்டன. இதில் ஒரு யானை வட்டப்பாறை பகுதியில் புகுந்தது. நேற்று மாலை அப்பகுதியில் சுற்றிய யானை வட்டப்பாறை வெள்ளறக்கு பகுதியை சேர்ந்த மதபோதகரான ராஜேஷ்(46) என்பவரை துரத்தி முதுகில் தந்தத்தால் குத்தி தூக்கி வீசியது. இதில் அவர் உயிரிழந்தார்.

Related Stories: