சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்ய கோரி நாளை தமிழகத்தில் கம்யூ. ஆர்ப்பாட்டம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் கடந்த சில மாதங்களாக உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே இதற்கு காரணமாகும். இந்த விலை உயர்வுக்கு ஒன்றிய பாஜ அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறேன். இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், ஒன்றிய பாஜ அரசின் தவறான கொள்கையை கண்டித்தும் நாளை (4ம்தேதி) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Related Stories: