டென்னிஸ் களத்தில் மீண்டும் செரீனா!: ரசிகர்கள் உற்சாகம்

 

சென்னை: டென்னிஸ் வரலாற்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர் அமெரிக்காவின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். டென்னிஸ் உலகில் தனிப்பெரும் அரசியாக ஆட்சி புரிந்த செரீனாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். டென்னிஸில் கோலோச்சிய செரீனா கடந்த 2022ம் ஆண்டில் தொழில்முறை டென்னிஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது ஓய்வு அறிவிப்பு உலக டென்னிஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மீண்டும் போட்டி டென்னிஸில் விளையாட போவதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இம்மாதம் நடைபெறவுள்ள குயீன்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் தொடரில் இரட்டையர் பிரிவில் செரீனா களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் டென்னிஸில் களமிறங்குவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: