குப்பையில் மண் கலந்து ஏற்ற வலியுறுத்தியதால் இரவு நேர தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு

*நிரம்பி வழிந்த குப்பை ெதாட்டிகள்

புதுச்சேரி : புதுச்சேரி நகர பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் தினந்தோறும் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. தினமும் சேகரிக்கும் குப்கைகள் குருமாம்பேட் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 ஷிப்டுகளாக துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் உழவர்கரை நகராட்சியில் இரவு பணியில் ஈடுபடும் துப்புரவு தொழிலாளர்களிடம் தனியார் நிறுவனம் சார்பில் அதிக டன் குப்பை வரவேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், குப்பையுடன் மண், கற்கல், கழிவுநீர் சகதி போன்றவற்றை கலந்து ஏற்றி டன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என வற்புறுத்தியதாக தெரிகிறது.

மேலும், காலை 6 மணிக்கு ஷிப்டு முடிந்த பின்னரும் 7 மணிவரை வேலை செய்ய வேண்டும், இரவு நேரங்களில காலி மனைகளில் உள்ள குப்பைகளை இருட்டில் சென்று எடுக்க வேண்டும் என நிறுவனம் சார்பில் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு தொழிலாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இரவு நேர துப்புரவு தொழிலாளர்கள் நேற்று இரவு திடீரென பணிக்கு வராமல் பணியை புறக்கணித்துள்ளனர்.

இதனால் இரவு முழுவதும் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டு சாலைகள் முழுவதும் குப்பை கூளமாக காட்சியளித்தது. மேலும் குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து உடனடியாக உள்ளாட்சி துறை, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை ைவக்கின்றனர்.

Related Stories: