ஐநா பொதுசபை 81வது தலைவர் தேர்தல்: வங்கதேசம், சைப்ரஸ் நாடுகள் நேரடி மோதல்

 

ஐநா: ஐநா பொதுசபையின் 81வது கூட்டத்தொடர் தலைவருக்கான தேர்தலில் வங்கதேசம், சைப்ரஸ் நாடுகள் நேரடியாக மோதுகின்றன. ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 81வது கூட்டம் நடப்பாண்டு செப்டம்பர் 8ம் தேதி நடைபெற உள்ளது. ஐநா சபையின் தலைமை விவாதம், கொள்கை உருவாக்கம் மற்றும் பிரதிநிதித்துவ அமைப்பான பொதுசபைக்கு அடுத்த ஓராண்டு காலத்துக்கான அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் இன்று நடைபெற உள்ளது.

பிராந்திய சுழற்சி முறைப்படி, ஆசிய-பசிபிக் குழுவை சேர்ந்த பிரதிநிதி ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த தேர்தலில் பாலஸ்தீனம் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் பின்னர் வேட்பு மனுவை திரும்ப பெற்று கொண்டது. இந்த சூழலில் இந்த தேர்தலில் வங்கதேசம், சைப்ரஸ் ஆகிய நாடுகள் நேரடியாக மோதுகின்றன. வங்கதேசம் சார்பில் அதன் வௌியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் கலீலூர் ரஹ்மான் மற்றும் சைப்ரஸ் சார்பில் பலதரப்பு உறவுகளுக்கான சிறப்பு தூதர் ஆன்ட்ரியாஸ் ககூரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Related Stories: