அதிபர் டிரம்ப் சிறந்த உடல்நலத்துடன் இருக்கிறார்: அதிபரின் மருத்துவர் அறிக்கை

வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் சிறந்த உடல்நலத்துடன் இருப்பதாகவும், பதவி வகிப்பதற்கான முழு தகுதியுடன் இருப்பதாகவும் அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கடந்த செவ்வாயன்று முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 22 நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட சிடி ஸ்கேன் மற்றும் பிற இதயம் தொடர்பான பரிசோதனைகள், புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் பிற தடுப்பு மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 3மணி நேரம் மருத்துவர்கள் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பரிசோதனை குறித்த அறிக்கையை மருத்துவர் சீன் பார்பபெல்லா நேற்று முன்தினம் வெளியிட்டார். இந்த அறிக்கையின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்(79) எடை 108கிலோ இருந்தது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த மருத்துவ பரிசோதனையை விட அதிபர் டிரம்ப் 6 கிலோ எடை கூடியுள்ளார்.

உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் எடை குறைப்பு குறித்து மருத்துவர்கள் அவருக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். ஆனால் அவரது அறிவாற்றல் மற்றும் உடல் செயல்திறன் மிகச் சிறப்பாக உள்ளது. இந்த அறிக்கையில் அதிபர் டிரம்பின் கைகளில் காயமேற்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அடிக்கடி கை குலுக்குவதால் ஏற்படும் சிறிய மென்மையான திசு எரிச்சல் என்று விளக்கப்பட்டுள்ளது.

இது ஆஸ்பிரின் சிகிச்சையின் பொதுவான மற்றும் தீங்கற்ற விளைவாகும். குறைந்த அளவு ஆஸ்பிரினுக்கு மாறுவது பரிந்துரைகளில் ஒன்றாகும். அதிபரின் உடல்நிலையில் அசாதாரணமாக எதுவும் இல்லை என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் வலுவான இதயம், நுரையீரல், நரம்பியல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கொண்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related Stories: