திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் இந்திய வம்சாவளி விமானி ஹெலிகாப்டர் விபத்தில் பலி: மணப்பெண் உயிர் தப்பினார்

 

நியூயார்க்: திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளி விமானி டேவ் பிஜி பரிதாபமாக பலியானார். மணப்பெண் ஜெஸ்னி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அமெரிக்காவின் அட்லாண்டாவை சேர்ந்தவர் டேவ் பிஜி. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் டெல்டா ஏர்லைன்சில் விமானியாக பணியாற்றினார். இவருக்கும் இவரது காதலி ஜெஸ்னிக்கும் டாவ்சன் கவுண்டியில் உள்ள டாவ்சன்வில்லி அருகே கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடந்தது. பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என 400 பேர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பின்னர் ஹனிமூன் கொண்டாட மணமக்கள் இருவரும் அட்லாண்டாவில் உள்ள பிரபல ஓட்டலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக புதுமணத் தம்பதியினர் ஹெலிகாப்டர் மூலம் பீச்ட்ரீடிகால்ப் விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து ஓட்டலுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக டாவ்சன்வில்லிக்கு அருகே அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி மணமகன் டேவ் பிஜி பரிதாபமாக இறந்தார். மணப்பெண் ஜெஸ்னி காயங்களுடன் உயிர் தப்பினார்.

மோசமான வானிலையால் இந்த விபத்து நடந்ததாக கூறிய டேவ் பிஜியின் தந்தை ஜார்ஜ் பிஜி தனது மகன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்ததாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Related Stories: