கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கே.அர்.பி. அணைக்கு வரும் 527 கன அடி நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
