சென்னை: தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
* நிதித்துறை செலவின செயலாளராக லலிதா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்
* நிதித்துறை இணைச் செயலாளர்களாக கமல் கிஷோர், பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
* உயர் கல்வித் துறை ஆணையராக இருந்த சுந்தரவல்லி, மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு மாற்றம்
* மக்கள் நல்வாழ்வுத் துறை துணைச் செயலாளராக அழகுமீனா நியமனம்
* ஊரக வளர்ச்சித் துறை ஆணையராக அமுதவல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
* இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக டி.ஜி.வினய் ஐ.ஏ.எஸ்-ஐ நியமனம்
* தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநராக உமா ஐ.ஏ.எஸ். நியமனம்
* வேளாண் ஒழுங்குமுறை ஆணைய இயக்குநராக சந்திரசேகர் சகாமுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
* பேரூராட்சிகளின் இயக்குநராக பிரியங்கா ஐ.ஏ.எஸ்.-ஐ நியமித்து தமிழக அரசு உத்தரவு
* மதுரை ஆட்சியராக ஆகாஷ், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் நியமனம்
* தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் நியமனம்
* கன்னியாகுமரி ஆட்சியர் பிரதாப், திருவண்ணாமலை ஆட்சியர் வந்தனா கர்க் நியமனம்
* கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜா, நெல்லை ஆட்சியர் ஆனந்த் மோகன் நியமனம்
* ராணிப்பேட்டை ஆட்சியர் பிரியா, நாமக்கல் ஆட்சியராக மதுபாலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
* வேலூர் ஆட்சியராக லீலா அலெக்ஸ், செங்கல்பட்டு ஆட்சியராக வீரப்பன் நியமனம்
* கன்னியாகுமரி ஆட்சியர் பிரதாப், திருவண்ணாமலை ஆட்சியர் வந்தனா கர்க் நியமனம்
* கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக தற்பக ராஜ் நியமனம்
* இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநராக பாலசுப்பிரமணியம் நியமனம்
* அயலக தமிழர்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநராக சதீஷ் நியமனம்
* பூம்பூகார் துறைமுகக் கழக மேலாண் இயக்குநராக ஜெயகாந்தன் நியமனம்
* தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண் இயக்குநராக ஸ்ரீதர் நியமனம்
* பவர் பைனான்ஸ் நிறுவன தலைவர் மங்கத் ராம் சர்மா, தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண் இயக்குநராக சரவண வேல்ராஜ் நியமனம்
* தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் நிறுவன மேலாண் இயக்குநராக ஆர்.வி.சஜீவனா நியமனம்
* புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக பி.கணேசன் நியமனம்
* சி.எம்.டி.ஏ தலைமைச் செயல் அதிகாரியாக எஸ்.பி.கார்த்திகாவை நியமனம்
* சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலராக சிம்ரன்ஜீத் சிங் கலோன் நியமனம்
* தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவன மேலாண் இயக்குநராக ரஞ்சித் சிங் நியமனம்
* தமிழ்நாடு கிராமபுற வளர்ச்சித் திட்ட தலைமை செயல் அலுவலராக வி.ஆர்.சுப்புலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
