வடலூர் அருகே பாதி உடல் புதைந்த நிலையில் முகம் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாத இளம் பெண் உடல் மீட்பு!

 

வடலூர்:கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் கண்ணு தோப்பு என்ற இடத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் சாலையின் அருகே அதிக அளவு மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் முகம் சிதைந்த நிலையில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் உடல் புதைந்த நிலையில் கிடந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் இது குறித்து வடலூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.

புகார் அடிப்படையில் நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகம் சிதைந்த நிலையில் இரண்டு நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும் கொலை செய்யப்பட்டாரா அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் வடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையின் அருகே இளம் பெண் முகம் சிதைந்த நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Stories: