×

குதிரை பேரத்துக்கு நாங்க அரேபியாவுக்கா போறோம்: கு.ப.கிருஷ்ணன் காமெடி

திருச்சி: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் நேற்று திருச்சி சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு வாழ்வாதாரம் தேடி வரும் மக்கள் தங்க, வசதி ஏற்படுத்தும் வகையில் இந்த துறை செயல்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக முதலமைச்சர் விஜய் வாரிய பொறுப்பை வழங்கியுள்ளார். வீடுகள் தேவைப்படுவோர் வெளி நபர்களை தொடர்பு கொள்ள வேண்டாம்.

அந்தந்த மாவட்டத்தில் கலெக்டர்களிடம் மனு அளியுங்கள். உரிய விசாரணை நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய் திருச்சி மக்களுக்கு நன்றி சொல்ல விரைவில் திருச்சி வருகை தர உள்ளார். குதிரை பேரம் என்றால் என்ன. நாங்கள் என்ன குதிரை வாங்க அரேபியாவுக்கா செல்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது அவர்களுடைய சொந்த விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Arabia ,K.P. Krishnan ,Trichy ,Tamil Nadu Urban Habitat Development Board ,Trichy Tourism House ,
× RELATED தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில...