பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த வெப்படை வேப்பங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மூத்த மகள் மோனிஷா, மயிலானந்தன் என்பவரை காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன், தனது 10 மாத குழந்தை ஜோஸ்விக் உடன், தாய் வீட்டிற்கு மோனிஷா வந்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வெங்கடாசலம், ஏன் வீட்டிற்கு வந்தாய்? எனக்கேட்டு மகளை அடித்து துன்புறுத்தி உள்ளார். நேற்று காலை, மோனிஷா தனது குழந்தைக்கு எலக்ட்ரிக் அடுப்பில், பால் காய்ச்சி கொண்டு இருந்தார். அப்போது, அலுமினிய பாத்திரத்தை எடுத்து, மோனிஷா மீது வெங்கடாசலம் வீசினார். அந்த பாத்திரம் குழந்தையின் தலையில் பட்டு மயக்கம் அடைந்து உயிரிழந்தது.
