×

தவெக தற்போது நடத்துவது; குதிரை பேரம் அல்ல; கழுதை பேர அரசியல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை: முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதிதாக பதவி ஏற்ற அரசை உடனே குறை கூட கூடாது என்றாலும், மிகக்கொடுமையான சம்பவங்கள் நடக்கும்போது சாதாரணமாக இருக்க கூடாது. கடுமையான நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மாற்றம் வேண்டும் என்று தேர்ந்தெடுத்த மக்கள் விருப்பத்திற்கு மாறாக எம்எல்ஏக்களை விலை பேசி தவெக தற்போது நடத்துவது குதிரை பேர அரசியல் அல்ல, கழுதை பேர அரசியல்.

இதைவிட கேவலமான நிலைமை தமிழகத்தில் எப்போதும் வந்தது இல்லை என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். எழுச்சியோடு மாற்றத்தை கொண்டு வந்த இளைஞர்களும், பெண்களும் எதிர்பார்த்த அரசு இல்லை என்று கூறி இந்த அரசை தூக்கி எறியவும் தயங்க மாட்டார்கள். தமிழக சட்டமன்றத்திற்கு என்று ஒரு மரபு உள்ளது. அந்த மரபு தற்போது மீறப்பட்டுள்ளது. இனி அவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும். அதிமுக பிரச்சனையை அவர்கள் தீர்த்து கொள்வார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

* ஆர்எஸ்எஸ் பேரப்பிள்ளை திருமாவளவன்
‘‘விஜய்யை கடந்த காலங்களில் ஆர்எஸ்எஸ்-ன் செல்ல பிள்ளை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறிவந்த நிலையில், தற்போது விஜய் அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால் ஆர்எஸ்எஸ் பேரபிள்ளையாக தான் திருமாவளவனை அனைவரும் பார்க்கின்றனர். அதற்காக திருமாவளவனுக்கு வாழ்த்துக்கள்’’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags : Thaveka ,Pon. ,Radhakrishnan ,Pudukottai ,Former Union Minister of State ,Pon. Radhakrishnan ,
× RELATED தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில...