×

குதிரை பேரத்தை தமிழக மக்கள் விரும்பவில்லை இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவோம்: அன்புமணி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் பாமக தலைவர் அன்புமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து உடனடியாக தவெகவில் இணைத்திருப்பது ஜனநாயக படுகொலையாகும். மக்கள் விருப்பத்துக்கு எதிராக எம்எல்ஏக்களை திடீரென ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்திருப்பது ஒரு மோசடி. இதை தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை.

இது குதிரை பேரத்தைவிட மோசமானது. வாக்களித்த மக்கள் என்ன தவறு செய்தனர்? எந்த காரணமும் இல்லாமல் 20 நாட்களில் ராஜினாமா செய்து இடைத்தேர்தலை ஏற்படுத்தியிருப்பது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது. ராஜினாமா செய்த 4 பேரும் இடைத்தேர்தலில் படுதோல்வி அடைவார்கள். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஆளுங்கட்சிக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை அறிவிப்போம். அந்த நிலைக்கு எங்களை தள்ளாதீர்கள்.

ராஜினாமா செய்த 10 நிமிடங்களில் கட்சியில் இணைந்துள்ளனர். இனி அவர்கள் தங்கள் தொகுதிக்குள் செல்ல முடியாது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, அனைத்து கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை முதலமைச்சர் விஜய் வலியுறுத்த வேண்டும். மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. அதிமுகவில் நடைபெறும் அக்கட்சியின் உட்கட்சி விவகாரம். அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை இவ்வாறு அவர் கூறினர்.

Tags : Anbumani ,Puducherry ,Bhamaka ,Tamil Nadu ,Davega ,
× RELATED தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில...