×

சூலூர் சிறுமி பலாத்கார கொலை 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது: காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

கோவை: கோவை அடுத்த சூலூர் பள்ளப்பாளையத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பக்கத்து வீட்டில் வசித்த நாகையை சேர்ந்த கார்த்தி (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சிறுமியை கொலை செய்த விவரத்தை தனது நண்பர் மோகனிடம் தெரிவித்தார். ஆனால் அவர் போலீசாரிடம் இதனை தெரிவிக்காமல் மறைத்தார்.

எனவே, உடந்தையாக இருந்த தஞ்சை சேர்ந்த மோகன் (30) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கார்த்தி போலீஸ் பிடியில் தப்பிக்க முயன்று ஓடியபோது கீழே விழுந்ததில் கை,கால் முறிந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கைதான கார்த்தி, மோகன் ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி பவன்குமார், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமாரிடம் பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையை ஏற்று, நேற்று கார்த்தி மற்றும் மோகன் ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து இதற்கான உத்தரவு நகலை போலீசார் சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். இந்நிலையில், கைதான இருவரையும் போலீசார் விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்ய உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

Tags : Sulu ,KOWAI ,VALLEY ,Karthi ,Nagaya ,
× RELATED தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில...